செட்டிநாடு பலாக்காய் கறி(Chettinad palakkay curry )

Rasipalankal

        மேஷம் ராசிபலன்(Wednesday, March 15, 2017)




உங்களின் பொறுப்பற்ற கருத்துகளால் குடும்பத்தினரின் உணர்வுகளை நீங்கள் புண்படுத்தலாம். முடியுமானால் கருத்துகளை சொல்வதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராக அமைந்து, குடும்பத்தின் பெயருக்கு களங்கமாகிவிடக் கூடும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நாள் முழுவதும் குதூகலமாக இருக்கும்.




        ரிஷபம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)


நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நற்செய்திகள் வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்றைய வேளையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.நீங்கள் செய்யும் வேலையில் உங்களது போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை இன்று அனுபவிப்பார்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால்  அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். பாட்னர் உங்களை கைவிடுவார். இது திருமணத்தையே நிறுத்தலாம்

    
  மிதுனம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)


   
இன்றைய நாள் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் . புதிய தொழில் தொடங்கினால் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும்.









      கடகம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)


இன்றை நாள் உற்சாகம் கூடும். உடன்பணிபுரிபவரால் நன்மை ஏற்படும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு.







     சிங்கம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)




தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.





       கன்னி ராசிபலன் (Wednesday, March 15, 2017)



போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக மாற்றம் எடுத்த முயற்சி வெற்றி தரும். அதிகாரிகளின் அனுகூலம் உண்டு.








        துலாம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)


கலைஞர்கள், தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ், பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மை தரும். 






விருச்சிகம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)



வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.








      தனுசு ராசிபலன் (Wednesday, March 15, 2017)



திருமணத்தடை நீங்கும் நாள். திடீர் வரவு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொன்ன சொல்லை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.








         மகரம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)



தெய்வீக முன்னேற்றம் கூடும் நாள். வருமானம் இருமடங்காகும் நாள். வழிபாடுகளில் சிந்தனையைச் செலுத்தி மகிழ்வீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையான தனலாபம் கிடைக்கும்.








      கும்பம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)




விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். உற்ற நண்பர் ஒருவரின் ஒத்துழைப்பு கிட்டும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படலாம். பங்காளிப் பகை மாறும்.



      மீனம் ராசிபலன் (Wednesday, March 15, 2017)


 தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். நிதானத்தைக் கடைப்பிடித்தால் நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம்.


No comments:

Post a Comment