முதலில் சிறிது எண்ணெயோ அல்லது லோஷனையோ கைகளில் தடவவும். பின் மெதுவாக அந்த எண்ணெயோ அல்லது லோஷனையோ தோலில் ஊடுருவும் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு வைட்டமின் ஈ உள்ள எண்ணெயை எடுத்து கை, விரல்களில் தடவி மசாஜ் செய்யவும். முக்கியமாக மணிக்கட்டு, உள்ளங்கை ஆகிய இடத்தில் நன்கு மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்யும் போது ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டு விட்டு செய்ய வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர உடல் ரிலாக்சாக இருக்கும். விரல்களில் இருக்கும் நரம்புகள் மணிக்கட்டுகளில் இணைவதால் மணிக்கட்டில் மசாஜ் செய்வது புத்துணர்ச்சியைத் தரும்.
மேலும் கை விரல்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு நெயில் பாலிஷ் அடித்தால் மட்டும் போதாது இந்த மாதிரியான மசாஜை செய்து முறையாகப் பராமரித்து வந்தால் தான் நகங்களும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்

No comments:
Post a Comment